பெங்களூரு: போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு 52 வயது பெண் ஒருவர் கோரிக்ைக விடுத்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடந்த போது எனது கட்சிக்காரருக்கு 48 வயது. சிறுவனுக்கு 14 வயது. சிறுவனுக்கும் உடலுறவு குறித்த புரிதல் இருந்துள்ளது என்று வாதாடினார்.
ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி நாகபிரசன்னா, ‘போக்சோ சட்டம் என்பது ஆண், பெண் இருவருக்கும் சமமானது. சிறுவனை உடலுறவுக்கு ஒரு பெண் கட்டாயப்படுத்துவதும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமே என்று கூறிய அவர் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.