மதுரை: போக்சோ வழக்கில் கீழமை நீதிமன்றம் திண்டுக்கல்லைச் சேர்ந்தவருக்கு விதித்த 25 ஆண்டுகள் சிறை தண்டனையை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழும் நிலையில் அவரை சிறைக்கு அனுப்பினால் தானும் குழந்தையும் நிராதரவாக விடப்படுவோம்" என பெண் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பிளஸ் 2 படிக்கும் போது காதலித்த இருவருக்கும் பாலியல் உறவு நடக்கவே, சிறுமியின் தாய் அளித்த புகாரில் பதிவான வழக்கில், 25 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து அந்நபர் மேல்முறையீடு செய்திருந்தார். இரு தரப்பின் வாதங்களை ஏற்று சிறை தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்தது.
+
Advertisement