போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!!
சென்னை: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது செய்யப்பட்டார். வீட்டில் பணியாற்றம் பெண்ணின் சகோதரர் மகளான 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. பாலியல் தொல்லை செய்த கோடம்பாக்கம் ஸ்ரீ, உடந்தையாக இருந்த சிறுமியின் அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோடம்பாக்கம் ஸ்ரீயை அக்டோபர் 28ம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.