பெரம்பூர்: டியூசனுக்கு சென்றபோது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த சிறுவனை போக்சோ சட்டத்தில கைது செய்து சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி கட்டபொம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் டியூஷனுக்கு சென்றபோது அவரிடம் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்தபோது அந்த நபர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். புகாரின்படி, எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துகொடுங்கையூர் சீதாராம் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை கைது செய்தனர். பின் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துவிட்டு சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.