புதுடெல்லி: பிரதமர் மோடி வாரணாசியில் நாளை வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு, இந்தியாவின் நவீன ரயில் கட்டமைப்பை விரிவுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்கபடியாக, நவம்பர் 8ம் தேதி(நாளை) காலை8.15 மணியளவில் நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் பனாரஸ் -கஜூராஹோ, லக்னோ -சஹாரன்பூர், ஃபிரோஸ்பூர் - டெல்லி மற்றும் எர்ணாகுளம்- பெங்களூரு வழித்தடங்களில் இயக்கப்படும். இது, உலகத்தரம் வாய்ந்த ரயில் சேவைகள் மூலம் குடிமக்களுக்கு எளிதான, வேகமான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதற்கான பிரதமர் மோடியின் பார்வையை நனவாக்குவதில் மற்றொரு மைகல்லாகும்” என தெரிவித்துள்ளது.
+
Advertisement
