சென்னை: பாமக தலைமை அலுவலகம் எது என்பது தொடர்பாக கே.பாலு விளக்கம் அளித்தார். அப்போது; பாமக தலைவராக அன்புமணிக்கு 2026 ஆக. 1 வரை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தந்துள்ளது. பாமகவின் அலுவலக முகவரி தியாகராயர் நகர், எண்.10, திலக் தெரு என்றுதான் உள்ளது. அன்புமணி தலைவராக வந்த பிறகே தேனாம்பேட்டை முகவரியில் இருந்து திலக் தெருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் இருந்து வெளியேற மாட்டோம். தேர்தல் ஆணையத்தில் இருந்து அன்புமணிக்கு வந்த கடிதத்தை பார்த்து பதற்றத்தில் உள்ளனர். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி அபாண்டமாக பேசுவது அழகல்ல. ஏதேதோ பேசி வரும் அருள் எம்.எல்.ஏ.வுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாமக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருமே அன்புமணி பக்கம்தான் உள்ளனர் என்றும் கூறினார்.
+
Advertisement