சென்னை: இதய பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அன்புமணி தெரிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நேற்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எல்லாம் நன்றாக உள்ளது. குறை எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர் என மருத்துவமனை வளாகத்தில் நிருபர்களிடம் கூறிய ராமதாஸ், டாக்டர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினரா என கேட்டதற்கு, ‘ஓய்வே கிடையாது,’ எனக்கூறிவிட்டுச் சென்றார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாமக தலைமை நன்றி தெரிவித்துள்ளது.