திண்டிவனம்: பாமகவின் சின்னம், கட்சிக் கொடி யாருக்கு? என்ற குழப்பம் ராமதாஸ், அன்புமணி வட்டாரத்தில் நிலவி வருகிறது. இதனிடையே பாமகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே பாமக மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் வருகிற 23ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் மறுநாள் (24ம் தேதி) நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.