விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன் வைத்திருந்தது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் கோரி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அன்புமணி பதிலளிக்க கெடு முடிந்த நிலையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. நாளை பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார்.
+
Advertisement