சென்னை: பாமக ஒற்றுமையாக இருந்தால் பலம், இல்லாவிட்டால் பலவீனம்தான் என பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை வந்தது கவலை அளிக்கிறது. ராமதாஸுடன் 45 ஆண்டுகாலமாக பயணித்து வருகிறேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு. பாமகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
+
Advertisement