சென்னை: பாமக பெயர், சின்னம் தொடர்பாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கட்சி, சின்னத்துக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும். கட்சி, சின்னத்துக்கு அன்புமணி உரிமை கோரினால் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர் முரளி சங்கரின் மனுக்களை வழக்கறிஞர் கோபு தாக்கல் செய்தார்.
+
Advertisement