சென்னை: பாமக எம்.எல்.ஏ. அருள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அருள் மீதான தாக்குதலுக்கு அன்புமணியின் நடைபயணமே காரணம் என ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். நடைபயணம் என்ற பெயரில் என்னை அன்புமணி அவமானப்படுத்துகிறார். பாமகவினரை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அன்புமணி வன்முறையை தூண்டுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். நடைபயணம் என்ற பெயரில் அன்புமணி கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்தேன் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement
