பிரதமர் மோடி மவுன சாமியார் ஆகிவிடுகிறார்: ரஷ்ய எண்ணெய் குறித்த ட்ரம்ப் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை!!
புதுடெல்லி: உலக விவரங்கள் எல்லாம் பேசும் பிரதமர் மோடி ஆபரேசன் சிந்தூர் மற்றும் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்காது என ட்ரம்ப் சொல்வது குறித்து வாய் திறக்காதது என் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள செய்தியில் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியது நான் தான் என 52 ஆவது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டி உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை 2 முறையும், ராணுவ தளபதியை 2 முறையும் டிரம்ப் சந்தித்த பிறகும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை என சாடியுள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், உலக விவகாரங்களை பேசும் மோடி, இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது என் என்று வினவியுள்ளார். பீகாரில், நிதிஷ்குமார் மற்றும் பாஜக ஆட்சியை அந்த மாநில மக்கள் தூக்கி வீச தயாராகிவிட்டார்கள் என்றும் நிதிஷ்குமார் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் சாடியுள்ளார்.