ஒடிசா: ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். உயர்கல்வி, தொலைதொடர்பு, ரயில்வே துறைகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 8 ஐஐடிக்களை விரிவுபடுத்தும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த 4 ஆண்டுகளில் 8 ஐஐடிக்களில் புதிதாக 10,000 மாணவர்களை சேர்க்கும் வகையில் விரிவுபடுத்த திட்டம். அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து ரூ.1,400 கோடி மதிப்பு ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4 ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.
+
Advertisement