கீழக்கரை : ஏர்வாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பிளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து இறந்தார்.ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்தவர் முஹமது பாஹிம் (17). இவர் ஏர்வாடியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் ஏர்வாடி தைக்கா பகுதியில் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராவிதமாக திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர் முஹமது பாஹிமை மீட்டு, ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், நெஞ்சு வலியில் இறந்ததாகவும் தெரிவித்தனர். பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.