Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரலாற்றுப் புகழ்பெற்ற ரஞ்சன்குடி கோட்டை சுவர்களில் முளைத்துள்ள செடிகள்: வேரோடு அகற்ற மக்கள் கோரிக்கை

பெரம்பலூர்: வரலாற்றுப் புகழ்பெற்ற ரஞ்சன்குடி கோட்டையில் அரசர்கள் வாழ்ந்த கோட்டைய கலங்கடிக்கும் அரச மர வேர்கள் மற்றும் செடிகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத் திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலமாக இருப்பது ரஞ்சன் குடி கோட்டை. கிபி 16ம் நூற்றாண்டின் இறுதியில் தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.

சந்தா சாஹிப், பிரெஞ்சு கூட்டுப் படைக்கும், முகமது அலி, ஆங்கிலேய கூட்டுப் படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால் கொண்டா போர் இந்த ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. நூற்றாண்டு களுக்குப் பிறகும் கம்பீர மாகக் காட்சி தரும் கோட் டைக்கு கருங்கல் சுற்றுச் சுவர் அக்காலத்திலிருந்து இருந்தாலும், இந்தியத் தொல்லியல் துறை சார் பாக இக்காலத்தில் இரும் பினால் ஆன சுற்றுச் சுவர் அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் கோட்டை பெரம்ப லூர் மாவட்ட சுற்றுலா ஸ்தலங்களில் பிரதானமான ஒன்றாகும்.

இது இந்தியதொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்றுப் பெருமை கொண்ட இந்த ரஞ்சன்குடி கோட்டையின் மதில் சுவர்கள், கோட்டை கொத் தளம் ஆகியவற்றில் அரச மரங்கள், ஆலமரங்கள், உன்னி செடிகள், முட் செடிகள், முள் மரங்கள் முளைத் துள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டில் கோட் டையின் தெற்கு புறத்தில் உள்ள கொத்தளம் பகுதி சரிந்து விழுந்தது அது பின்னர் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் சில மாதங் களுக்கு முன்பு பெய்த மழையால் வேர்பிடித்து, சமீபத்தில் பெய்த கோடை மழையால் செழிப்பாக முளைத்துள்ள அரச மர, ஆல மரங்களின் வேர்கள் கல் இடுக்குகளின் வரிசையில் விரிசலை ஏற்படுத்தி, பின்னர் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் பெய்யக் கூடிய பெரு மழையில் சரிகின்ற நிலையை ஏற்படுத் திவிடும்.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தின் பெருமைக்கு ஆதாரமாக விளங்கிவரும் அரசர்கள் ஆட்சி செய்த கோட்டை அரச மரத்தின் வேர்களால் ஆட்டம் கண்டு விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு ஆண்டும், முன் கூட்டியே இது போன்ற செடிகள் முளைக்கின்ற போது வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு நவீன தொழில் நுட்ப முறைகளை பயன் படுத்தி சுவர்களை வலுப்படுத்த வேண்டும்.

பல்வேறு இடங்களில் சுண்ணாம்பு காரை பெயர்ந்து உள்ளது. அவற்றையும் முன்பாகவே சீரமைக்க வேண்டும் என சூழலியலாளர் ரமேசு கருப்பையா மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்தியத் தொல்லியல் துறைக்கும், அதனை விரைவாக செய்ய வேண்டும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.