*விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை : முளைப்புத்திறன், ஈரப்பதம் துல்லியமாக தெரிந்து கொள்ளவிதைப்பரிசோதனை அவசியம் விவசாயிகள் விதைப்பு செய்திட வேண்டும் என வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் இருப்பு வைத்துள்ள விதைக்குவியல்களில் இருந்து விதை மாதிரிகளை எடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி விதைப்பரிசோதனை செய்து விதைக்குவியலின் விதைத்தரங்களான புறத்தூய்மை, முளைப்புத்திறன், பிறரக கலவன் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை துல்லியமாக தெரிந்து கொண்டு விவசாயிகள் விதைப்பு செய்திட வேளாண் அலுவலர் சுமித்ராதேவி அறிவுறுத்தியுள்ளார்.
விதைப்பரிசோதனையின் பயன்கள்:
விதைக்குவியலின் தரம் அறிவதால் விதையின் அளவு தெரிந்து விதைக்கலாம். விதைச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதை தரங்களை விதைகள் கொண்டுள்ளனவா என அறிந்து கொள்ளலாம்.
விதை தரம் அறிந்து விதைப்பதால் நல்ல மகசூல் மற்றும் நல்ல வருவாய் கிடைக்கிறது.விவசாயிகளுக்கும், விதைவிற்பனையாளர்களுக்கும் விதை உற்பத்தியாளர்களுக்கும் விதையின் உண்மையான தரத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் விதைப்பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருப்பதால் ஐப்பசி பட்டத்தில் நெல், சோளம் மற்றும் காய்கறிப்பயிர்களான கத்திரி, தக்காளி, வெங்காயம், வெண்டை பாகல் புடல், செடிமுருங்கை ,பூசணி ஆகிய பயிர்கள் பயிரிட ஏற்றதாகும்.
ஒவ்வொரு விவசாயியும் சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் முளைப்புத்திறன் அறிய விதைமாதிரிகளை விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூபாய் 80ஃ- மட்டும் ஆய்வு கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம் குவியல் எண் ஆகியவை குறித்த விபரசீட்டுடன் நெல் விதை 50கிராம், சோளம் உளுந்து,
பாசிப்பயறு 100 கிராம் , மக்காச்சோளம் , நிலக்கடலை 500 கிராம,; எள், ராகி 25 கிராம் காய்கறிப்பயிர்களான கத்திரி , தக்காளி, மிளகாய் -10 கிராம் வெண்டை, சுரை, பரங்கி, பூசணி , வெள்ளரி-100 கிராம், பாகல், புடல், செடிமுருங்கை -250 கிராம் வெங்காயம்-10கிராம், ஆகிய அளவில் விதைமாதிரி எடுத்து தங்களது முழு முகவரியுடன் கூடிய கடிதத்துடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விதையின் முளைப்புத்திறன் அறிந்து தரமான விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமாறு விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் சுமித்ராதேவி மற்றும் செல்வம் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
