டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்ய டிஜிட்டல் கையெழுத்து கட்டாயம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ECI இணையதளம், செயலியில் வாக்காளர் சேர்க்க, நீக்க ஆதாருடன் இணைத்த பான் எண் மட்டுமே பயன்படுத்த முடியும். வாக்காளர் எண், செல்போன் எண் மூலம் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. வாக்காளர் பெயர் நீக்க கர்நாடகாவில் போலி அடையாளம், போலி செல்போன் எண் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது. கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் சுமார் 6,000 வாக்காளர்கள் போலியாக நீக்க முயற்சி நடந்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் பி.ஆர்.பாட்டில் தலையீட்டில் கடைசி நேரத்தில் முயற்சி முறியடிக்கப்பட்டது. வாக்குகளை நீக்க வேறு மாநிலங்களில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டது சிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
+
Advertisement