அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பில்டர் சைலேஷ் பட். அவரது நண்பர் கிரித் பலாடி ஆகியோர் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்.9 அன்று காந்தி நகரில் வைத்து கடத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.32 கோடி மதிப்புள்ள 200 பிட்காயின்கள் பறிக்கப்பட்டன.
இது தொடர்பாக குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் தாரி தொகுதி முன்னாள் பா.ஜ எம்எல்ஏ நளின் கோட்டாடியா, அம்ரேலி மாவட்ட மாஜி எஸ்பி ஜகதீஷ் படேல் உள்பட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த தீர்ப்பில் மாஜி எம்எல்ஏ நளின் கோட்டாடியா, மாஜி எஸ்பி ஜகதீஷ் படேல் உள்பட 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். அதே நேரத்தில் ஒரு பிபின் படேல் என்பவர் விடுவிக்கப்பட்டார்.