சென்னை: தமிழ்நாட்டில் முன்னோடி திட்டங்களால் கல்வித்துறையில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளதாக தலைமைச் செயலர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் கல்வித்துறையில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. 48% ஆக இருந்த மாணவர் சேர்க்கை விகிதம் 75% ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முதல்வரின் சீரிய தலைமையில் தொழில்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement