பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கிவருவதாக மீண்டும் புகார் வந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

