திருவனந்தபுரம்: புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரம் திரும்பினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் புற்று நோய்க்காக அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக கடந்த 5ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 10 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று அதிகாலை 3.30 மணியளவில் முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரம் திரும்பினார். விமானநிலையத்தில் அவரை தலைமைச் செயலாளர் ஜெயதிலக், டிஜிபி ரவடா சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர்.
+
Advertisement