Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பன்றிகள் தொல்லையால் வேதனைக்குள்ளாகும் விவசாயிகள்: கூட்டமாக இரவில் வந்து பயிர்களை சேதப்படுத்துவதாக கவலை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பன்றிகள் தொல்லையால் சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம் வழியாக வைகை பாய்வதால் நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. செப்டம்பரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நம்பி விவசாயிகள் ஆகஸ்ட் மாதத்திலேயே நெல், நாற்றங்கால் தயார் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சில நாட்களாக பன்றி தொல்லை அதிகரித்து வருவதால் நெல் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பன்றிகளை அந்த அந்த பகுதி விவசாயிகளே பிடித்து அப்புறப்படுத்த மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளபோதும் பன்றிகளை எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் அவற்றை பிடிக்க முடியவில்லை என்கின்றனர். பன்றிகளை பிடிக்க சிவகங்கை மாவட்டம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் விவசாயிகள் பன்றி தொல்லைக்கு முடிவுகட்டப்பட்டால் சாகுபடி பரப்பளவு மூன்று மடங்குவரை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர்.