சென்னை: முதலாவது இந்திய பிக்கிள்பால் லீக் (ஐபிபிஎல்) போட்டி, இந்திய பிக்கிள்பால் சங்கத்தின் ஆதரவுடன் மத்திய விளையாட்டு, இளைஞர் நலன் அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணி களம் காணவுள்ளது.
இதற்கான அறிமுக விழா சென்னையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பிரபல நடிகைகள் ஸ்ரீலீலா, கயாடு லோஹர், முன்னணி பிக்கிள்பால் வீரர்கள் மிஹிகா யாதவ், அமன் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை டெல்லியில் நடைபெறும் பிக்கிள்பால் போட்டிகளில் மற்ற அணிகளுடன் சென்னை அணி மோதவுள்ளது.


