காட்பாடி: காட்பாடியில் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறப்பு உதவி ஆய்வாளர் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீநகர் பகுதியில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய புருஷோத்தமன், ஜெகதீஷ் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகளை வைத்து 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். புருஷோத்தமனின் தாயார் கஸ்தூரி ராணிப்பேட்டைகாவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக உள்ளார். பெட்ரோல் குண்டு வீசுவதற்காக பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement