சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் இரண்டு நாட்கள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விஜய்யின் சென்னை சுற்றுப்பயணம் வடசென்னை மற்றும் தென்சென்னையில் தலா ஒரு நாள் என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்காக, இந்த மாதம் 27ம் தேதி வடசென்னையிலும், அடுத்த மாதம் 25ம் தேதி தென்சென்னையிலும் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு, அதற்கான அனுமதியைக் கோரி கடிதம் கொடுத்துள்ளோம். பிரசாரத்தின் போது விஜய் எந்தெந்த இடங்களில் பேசுவார் மற்றும் பயணத்திட்டத்தின் முழு விவரங்கள் என்ன என்பது குறித்து கட்சியின் தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். தற்போது, குறிப்பிட்ட தேதிகளில் பிரசாரத்தை நடத்துவதற்கான அனுமதியைக் கோரி மட்டுமே மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.