மதுரை: தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய போலீஸ் மனு தாக்கல் செய்யாதது ஏன்? என பல்வேறு ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 2024 ஜனவரி முதல் ஜூன் வரை 2,331 ஜாமின்களை ரத்து செய்ய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுக்கள் மீதான விசாரணையில் 355 ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது; 790 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,181 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தன் மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மதுரையை சேந்த சபரி காந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
+
Advertisement


