Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியை அகற்ற கோரி செங்கல்பட்டு ஆட்சியரிடம் மனு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜிடம் மனு வழக்கினர் அந்த மனுவில் இந்திய ஒன்றியத்தினுடைய தலைமை கணக்காயர் தகவலின் படி 2019-ல் காலாவதியான செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மக்கள் பணம் 28 கோடி ரூபாயை கட்டணமாக சுரண்டப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

காலாவதியான சுங்கச்சாவடியை பொருத்தமட்டில் 40 சதவீத கட்டணம் மட்டுமே பராமரிப்புக்காக வசூல் செய்ய வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உடைய விதி அந்த விதியை இவர்கள் பின்பற்றுவது இல்லை. முற்றிலும் கலெக்சன் ஏஜென்ட் மட்டுமே அமர்ந்து கொண்டு வாகனங்களுக்கான பணத்தை மட்டும் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். என்பது யாவரும் அறிந்த உண்மை ஆகவே நமது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனுர் சுங்கச்சாவடி இருப்பதினால் நமது மாவட்ட ஒட்டுமொத்த அரசு நிர்வாகங்களுக்கும் அவப்பெயரை தேடி கொடுக்கக்கூடிய நிலை உள்ளது.

ஆகவே மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக தங்களின் அதிகாரத்திற்குட்பட்ட சட்ட விதிகளை பயன்படுத்தி இந்த சுங்கச்சாவடியை பயன்படுத்தக்கூடிய இலட்சோப லட்ச மக்களுடைய நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதை இந்த மனுவின் மூலம் ஒட்டுமொத்த சாலைப் பயன்பாட்டாளர்கள் சார்பில் இக்கோரிக்கை மனுவை தங்களுக்கு அளிக்க விரும்புகிறோம்.

இந்த பரனுர் சுங்கச்சாவடியினுடைய அத்துமீறலை கண்டித்து மக்களை ஒன்று திரட்டி பல்வேறு கட்ட பெருந்திரள் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எவ்வித முன்னேற்றமும் காணப்படாத காரணத்தினால் இந்த நிலையை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.