Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரும்பாறை மலைப்பகுதியில் பலாப்பழ மகசூல் அமோகம்

*விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி : பெரும்பாறை மலைப்பகுதியில் இந்த ஆண்டு சீசன் தொடங்கியதையொட்டி பலாப்பழ மகசூல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள தாண்டிக்குடி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஏணிக்கல், வெள்ளரிக்கரை, தாண்டிக்குடி, கவியக்காடு, மங்களங்கொம்பு, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கடுகுதடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பலா மரங்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பலாப்பழ சீசனாகும். இதன்படி இந்த ஆண்டு பெரும்பாறை மலைப்பகுதியில் மரங்களில் பலாப்பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நன்கு பழுத்த பலாப்பழங்களை மரங்களில் இருந்து வெட்டி கயிறு கட்டி இறக்குகின்றனர். இந்த பலாப்பழங்களை திண்டுக்கல் முழுவதும் மட்டுமின்றி மதுரை, விருதுநகர்,

தேனி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அனுப்பி வருகின்றனர். பழங்களின் தரம், எடைக்கு தகுந்தவாறு ரூ.100 முதல் 200 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு பலாப்பழ மகசூல் அதிகளவில் உள்ளன.

இப்பகுதியில் பலாப்பழ மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் துவங்க வேண்டும். இதனால், விற்பனையாகாத பலாப்பழங்களை அழுகாமல் பாதுகாக்கலாம்.இதன்மூலம் மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் உயரும். மேலும் பலாப்பழங்களுக்கும் நல்ல விலையும் கிடைக்கும்’ என்றனர்.