மதுரை: ஜல்லிக்கட்டு நடத்தியது போல், சேவல் சண்டை நடத்துவதற்கு ஒரு சட்ட திருத்தம் அரசு இயற்றினால், சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையில் சேவலின் காலில் கத்தி கட்டாமல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது கருத்து தெரிவித்துள்ளது. சேவல் சண்டைக்கு அனுமதிகோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement
