Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூரில் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது ஏன் என்று ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்

கரூர்: தவெகவினர் முதலில் கேட்ட லைட் அவுஸ் ரவுண்டான பகுதி மிகவும் ஆபத்தான பகுதி. 2வதாக தவெக கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம். 3வது ஆக காவல்துறை சார்பில் ஏற்கெனவே அதிமுக பிரச்சாரம் நடந்த இடத்தை தவெகவுக்கு பரிந்துரைத்தோம். போலீஸ் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்துக்கு தவெக ஒப்புதல் பெற்றது

குறைவான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்களா என்ற கேள்விக்கு ஏடிஜிபி விளக்கம். தவெக பிரச்சாரத்துக்கு ஒரு எஸ்.பி. தலைமையில் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஊர்களை விட கரூரில் தவெக பிரச்சாரத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன்தான் ஆம்புலன்ஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

மத்திய மண்டல ஐஜியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தவெக பிரச்சாரத்தில் கல் எரிந்ததாக எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை. நாமக்கல்லில் விஜய் செய்ய வேண்டிய பிரச்சாரமே 6 மணி நேரம் தாமதமானதால் பலர் பாதிக்கப்பட்டனர். விஜய் தாமதமாக வந்ததால் காத்திருந்த தொண்டர்கள் அவரை பார்க்க முண்டியடித்துள்ளனர்.

தவிட்டுபாளையத்தில் இருந்து கரூர் கடந்து வர 2 மணிநேரம் எடுத்துக் கொண்டார் விஜய்; ஆனால் 30 நிமிடங்களில் கடக்கக்கூடிய தொலைவு. சாலையில் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் விஜயை பார்க்க முற்பட்டபோது ஏதோ ஒன்று நடந்துள்ளது. காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் கூட்டத்துக்கு வெளியே கொண்டுவர இயலவில்லை. நெரிசல் ஏற்படுவதற்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்

விஜயை பிரச்சார இடத்தில் இருந்து அழைத்து செல்ல சிரமம் அடைந்தோம். போலீஸ் சொன்ன இடத்தில் விஜய் வாகனத்தை நிறுத்த தவெக பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர். 50 மீட்டர் முன்கூட்டியே விஜய் வாகனத்தை நிறுத்தும்படி கரூர் டிஎஸ்பி கூறியபோதும் அதனை ஏற்க மறுப்பு. விஜய் பிரச்சாரத்தில் 50 பேருக்கு ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஆபத்து குறைவான கூட்டம் என்றால் 250 முதல் 300 பேருக்கு ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்பில் இருப்பர். பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு விஜய் வந்தபோது தொண்டர்காளால் அவரை காண முடியவில்லை. விஜய் பிரச்சாரத்திற்கு திரள்பவர்களை அதிக ஆபத்துள்ள கூட்டமாக கருதியே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது