Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உறுதியோடு சொல்கிறேன், என்றென்றும் பெரியாரின் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்.. சாதிக்கும்: முதலமைச்சர் பதிவு

லண்டன்: உறுதியோடு சொல்கிறேன் என்றென்றும் பெரியாரின் வழியில் நமது திராவிட மாடல் அரசு தொடரும்.. சாதிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

ஆக்ஸ்போர்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு!

தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் முனைவர் மனோகரன் தொகுத்துள்ள The Cambridge Companion To Periyar நூலையும்;

பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் விக்னேஷ் கார்த்திக் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன்.

ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றைச் செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞருக்கும்- நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது. உறுதியோடு சொல்கிறேன், என்றென்றும் பெரியாரின் வழியில், நமது திராவிடமாடல் அரசு தொடரும்! சாதிக்கும்! இவ்வாறு பதிவிட்டார்.