காசா மீதான போரை உடனடியாக நிறுத்த கோரி சென்னையில் பேரணி: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களை சந்தித்து பேசியதாவது: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வரும் சூழலில் இதனை இனைப்படுகொலை என ஐநா அறிவித்திருப்பதால் போரில் மற்ற நாடுகளும் தலையிட முடியும். இந்தியாவிலிருந்து இஸ்ரேல் தூதரகத்தை இந்தியா வெளியேற்ற வேண்டும். காசா மீதான இஸ்ரேல் போருக்கு அமெரிக்கா தான் முக்கிய காரணமாகும். எனவே, காசா மீதான போரை உடனடியாக நிறுத்த கோரி சென்னை புதுப்பேட்டையில் மாபெரும் பேரணி நடத்தப்படும். இந்த பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்துகொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.