தந்தை பெரியாரின் பிறந்தநாளில் முதலமைச்சர் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம்: துணை முதலமைச்சர்
சென்னை: சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம் என தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார்.
'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்!
சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம்!" என பதிவிட்டுள்ளார்.