மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெரும்பாலும் சானிட்டரி நாப்கின்களை (sanitary pads) பயன்படுத்துகிறார்கள். ஒருசிலர் கப், டேம்பான் பயன்படுத்துகிறார்கள். எனினும் சானிட்டரி பேட்கள் தான் பயன்படுத்த சுலபமாகவும், நீண்டகால பழக்கமாகவும் உள்ளன. ஆனால் நாப்கின்களை தூய்மையாக பயன்படுத்தவில்லை என்றால், அது பல வகையான தோல் வறட்சி, காயங்கள், அலர்ஜி, வைரஸ், பாக்டீரியா தொற்று போன்றவை உண்டாக வாய்ப்பு உண்டு.இதனால், கீழ்கண்ட தூய்மை வழிமுறைகள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும்:
சரியான நேரத்தில் சானிட்டரி பேட் மாற்றுங்கள்
*ஒரு நாப்கினை அதிகபட்சம் 6 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
*அதிக ஓட்டம் உள்ள நாட்களில் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுவது சிறந்தது.
*நீண்ட நேரம் நாப்கினை மாற்றாமல் இருக்கும்போது, பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்பு அதிகம்.கைகளைசுத்தமாக வைத்திருங்கள்
*நாப்கினை மாற்றும் முன், பின் இரு முறையும் கைகளை சுத்தமான சோப்பால் கழுவுங்கள்.
*இதனால் கிருமிகள் பரவாமல் தடுக்கும்.பழைய நாப்கினை தூக்கிப்போடுங்கள்
*பயன்படுத்திய நாப்கினை சுருட்டி, அதைப் பேப்பரில் மூடி, கூடுதல் பிளாஸ்டிக் கவரில் அல்லது அதற்கான கவர்களில் சுற்றி குப்பை டப்பாக்களில் போட வேண்டும்.
*கழிப்பறைக்குள் அல்லது கழிவுநீர்குழியில் போடக்கூடாது.
*மாதவிடாய் காலத்தில் கழிப்பறைகளை பயன்படுத்தினால் ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்யுங்கள். எங்கேயும் கரைகள் உள்ளனவா, சரியாக கழிவறை குழி வெள்ளையாக உள்ளனவா என்கிற சோதனையும் அவசியம்.
*ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் சுத்தமாக இருக்க வேண்டும்
*மாதவிடாய் நாட்களில் தினமும் துவைத்த உள்ளாடை மாற்றுவது அவசியம்.
*நன்கு உலர வைத்த உள்ளாடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
*இல்லையேல் சானிட்டரி பேட்களின் பசை ஒட்டாமல் உரிந்து வந்துவிடும். வாசனை உள்ள நாப்கின்கள் தவிர்க்கலாம்
*சில நாப்கின்கள் வாசனை கொண்டிருக்கும். இது சில பெண்களுக்கு அலர்ஜி அல்லது எரிச்சல் ஏற்படுத்தலாம்.
*அதிக ரசாயன கலப்புகள் இல்லாத காட்டன் நாப்கின்கள் அல்லது ஆர்கானிக் வகைகள் தேர்ந்தெடுக்கலாம்.
*சானிட்டரி பேட்கள் மேற்புறம் அதிக சொரசொரப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையேல் உராய்ந்து புண்ணாக்கும். அந்தரங்க உறுப்பு சுத்தம்
*மாதவிடாய் நாட்களில் தினமும் இரு முறை சுத்தம் செய்தல் அவசியம்.
*சோப்புகள், வாஷ்கள் பயன்படுத்த வேண்டாம். வெறும் நீர் போதும். இல்லையேல் பெண்ணுறுப்புக்கான பிரத்யேக வாஷ்கள் பயன்படுத்தலாம். அவற்றில் pH அளவு குறைவாக இருக்கும். பயணங்களில் முன்கூட்டியே ஏற்பாடு
* வெளியே பயணிக்கும்போது கூடுதல் நாப்கின்கள் வைத்திருக்க வேண்டும்.
* நன்கு மூடிய கவரில் வைக்கவும்.
* கழிப்பறை வசதிகள் இல்லாத இடங்களில் பயன்படுத்த டிஸ்போசபிள் பேட் பவுச்சுகள் பயன்படும்.கூடுதல் பரிந்துரை
* Menstrual cup, Cloth pads அல்லது Tampons போன்ற மாற்றுப் பாதுகாப்பு முறைகள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை பயணம் காரணமாக மருந்து கடைகள் கூட இல்லாத காட்டுப்பகுதிகளில் பயணிக்கும் பொழுது இப்படியான கப் பயன்படும். அதேபோல் நீரில் மூழ்கி பயணிக்க வேண்டிய இடத்தில் அல்லது விளையாட வேண்டிய இடத்தில் ஓரமாக அமர்ந்திருக்க அவசியம் இல்லை . அதற்குப் பதிலாக தாம்போன்கள் அல்லது மாதவிடாய் கப்புகள் பயன்படுத்தலாம்.
*நீங்கள் தேர்வு செய்யும் menstrual product உங்கள் உடல், வசதி மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்.இவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு ( Indian Council of Medical Research (ICMR)), உலக சுகாதார அமைப்பு (WHO) கொடுத்திருக்கும் அதிகாரப்பூர்வ மாதவிடாய் தூய்மை வழிகள்.
- ஷாலினி நியூட்டன்.