பாடாலூர்: புதுச்சேரியை சேர்ந்தவர் திருச்சியில் நடக்கும் உறவினர் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு 8 பெண்கள் உள்பட 16 பேர் இன்று திருச்சியை நோக்கி ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை, திருச்சிற்றம்பலம் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் வேலு மகன் மகேஷ்குமார் (29), ஓட்டிச் சென்றார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் சென்ற போது வேனின் பின்புற வலது பக்க டயர் பஞ்சராகி வெடித்தது.
இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பெண்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்துகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

