சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பாடல் வெளியீட்டு விழா மற்றும் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழா பட்டாபிராம் தண்டரை பகுதியில் நடந்தது. கட்சியின் கொள்கை பாடல் சிடியை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட அமைச்சர் சா.மு.நாசர், கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஆவடி மேயர் உதயகுமார் பெற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் செருப்பை எடுத்து வீசி இருக்கிறார். அவர் மீது செருப்பு வீசியதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. 2026ல் மக்களின் ஆதரவுடன் இந்த கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement