கரூர் அரசு மருத்துமவனையில் காயமடைந்தவர்களுக்கு நேற்று ஆறுதல் கூறிய அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இது போன்ற கூட்டங்கள் நடத்தினால் தொண்டர்களுக்கு குடிநீர், உணவு போன்று எல்லாம் திட்டமிட வேண்டும். பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது. பெண்களை அழைத்து வரக்கூடாது. இந்த கூட்டத்தில் இருக்கைகள் கிடையாது.
கும்பலா நின்று கொண்டு கேட்டுட்டு போகிற கூட்டம். அங்கு குழந்தைகளையும், பெண்களையும் அழைத்து வந்தால் நெரிசல் இருக்கும். இதெல்லாம் தவிர்த்து இருக்க வேண்டும். வரும் காலங்களில் திட்டமிட வேண்டும். காவல்துறையினரும், பெரிய இடங்களில் அனுமதி கொடுக்க வேண்டும்.
நெருக்கடியான சூழ்நிலை உருவாக்க கூடாது. இன்னொன்று வதந்தியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மின்தடை ஏற்பட்டது என்று சொல்லுகிறார்கள். இதெல்லாம் வருகின்ற செய்தி. ஒரு தனிநபர் கமிஷன் அமைத்திருப்பதாக கூறுகிறார்கள். அந்த தனிநபர் கமிஷன், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பிறகு இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெற கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.