வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய பெகாசஸ் மென்பொருள் தயாரிப்பாளரான என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெள்ளி அன்று அமெரிக்க நீதிமன்றம், என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு நிரந்தர தடை உத்தரவை பிறப்பித்தது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் போன்ற தகவல் பரிமாற்ற சேவைகளில் ஊடுருவும் என்.எஸ்.ஓ.வின் முயற்சிகளுகக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை 167 மில்லியன் டாலர்களில் இருந்து 4 மில்லியன் டாலராக குறைத்தது. மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் நிறுவனத்துக்கு எதிரான 6 ஆண்டு வழக்கு முடிவுக்கு வந்தது.
பெகாசஸ் உளவு மென்பொருள்மூலம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின. இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள்.
இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு (உளவு, ராணுவம்) விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால்,முறைகேடாக பயன்படுத்தப்படு வதாக புகார் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த என்எஸ்ஓ உத்தரவிட்டுள்ளது.
பெகாசஸ் மென்பொருள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தொடர்பான புகார் குறித்து உள் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் சில வாடிக்கையாளர்கள் (நாடுகள்) இந்த மென்பொருளை பயன்படுத்த தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களின் கேள்விகளுக்கு இனி என்எஸ்ஓ பதில் அளிக்காது. மேலும் ஊடகங்களின் இதுபோன்ற தீய மற்றும் அவதூறு பிரச்சாரங்களுக்கு என்எஸ்ஒ பொறுப்பேற்காது
இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் தயாரிப்பாளரான என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது.