திருமலை: திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள், 7 மாவட்ட எஸ்.பிக்கள், கலெக்டர்களுடன் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: செம்மரங்களை வெட்டும் தொழிலில் யாரும் ஈடுபடக்கூடாது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு இதையே சொல்கிறேன். அங்கும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும். கடத்தல்காரர்களுக்கு எனது எச்சரிக்கை நீங்கள் கடத்தலில் ஈடுபட்டால், நான் நடவடிக்கை எடுப்பேன். மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட ஆபரேஷன் ககார் போல இங்கேயும் மற்றொரு நடவடிக்கையாக ஆபரேஷன் ரெட்சேண்டர் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
+
Advertisement

