Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவன்கேரா மனைவியிடமும் 2 வாக்காளர் அட்டை: பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவின் தலைவரான பவன் கேராவுக்கு, புதுடெல்லி மற்றும் ஜங்புரா ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக பாஜ நேற்று முன்தினம் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்துள்ள பவன்கேரா 2016-2017ம் ஆண்டிலேயே ஒரு தொகுதியில் இருந்து பெயரை நீக்குவதற்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் பெயர் நீக்கப்படவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் பாஜவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் தள பதிவில், ” தெலங்கானாவின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும் கைராபாத் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரும், பவன் கேராவின் மனைவியுமான கோட்டா நீலிமா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார். ஒன்று கைராபாத்தில் பதிவு செய்யப்பட்டது. மற்றொன்று டெல்லியில் பதிவு செய்யப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.