பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா துணை சுகாதார நிலையத்தில் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலாவில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினமும் சுற்று வட்டாரம் பகுதியை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் துணை சுகாதாரநிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக துணை சுகாதாரநிலையத்திற்கு தண்ணீர் வராமல் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கழிப்பறைக்கு செல்பவர்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே துணை சுகாதாரநிலையத்திற்கு சீரான தண்ணீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.