ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, காமராஜ்,விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சட்டமன்ற வளாகத்தில் தேவரின் முழுஉருவப்படம் திறக்கப்பட்டது. சென்னை நந்தனத்தில் தேவருக்கு சிலை அமைக்கப்பட்டது. அருப்புக்கோட்டையில் போட்டியிட்டு வென்று மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் என்று நிரூபித்தவர் தேவர். தேவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.
+
Advertisement
