Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்பு; மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலைக்கு சென்று திரும்பிய போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 2 பெண்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது . மற்றொருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பருவதமலைக்கு பக்தர்கள் செல்ல திருவண்ணாமலை மாவட்ட நிவாகம் தடைவிதித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பருவதமலை பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சென்னையை சேர்ந்த 2 பெண்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.