அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களுடைய கட்சியின் சட்டவிதிகளின் படி, கட்சிக்கு எதிராக, தலைமைக்கு எதிராக ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே கருதுகிறேன். தலைமைக்கு கெடு வைக்கும் அளவுக்கு, அவரது பேட்டி இருந்தது. அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. இதனால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
எடப்பாடி எடுத்தது சரியான முடிவு. அவரது முடிவுக்கு உட்படுவோம், கட்டுப்படுவோம். அவர் எந்த முடிவு எடுத்தாலும், அவரது பின்னால் நிற்போம். ெசங்கோட்டையன் பின்னால் யாரும் போகமாட்டார்கள். அவரது விசுவாசிகள் மட்டும் தான் போவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.