Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு பள்ளியை பயன்படுத்தும் செங்கிஸ்கானுக்கு எதிராக போர்க்கொடி உயர்ந்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கப்பம் கட்டணுமேன்னு சுய உதவிக்குழு பெண்களை புலம்ப வைக்கிறாராமே உதவி அதிகாரி..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் பெண்களுக்கான திட்ட அலுவலகத்தில் வடமாநில புண்ணிய நதியின் பெயரைக் பாதியாக கொண்ட ஒரு உதவி அதிகாரி இருக்கிறார். இவர் சுய உதவிக்குழு பெண்களிடம் கமிஷனை கறப்பதில் ரொம்பவே கறாராம்.. 10 சதவீதத்தில் ஒரு ரூபாய் குறைந்தாலும் வாங்க மாட்டாராம்.. டென்ஷனாகி விடுவாராம்.. அந்தளவுக்கு படு கறாரான இவர் மீது தலைநகர் வரை ஏகப்பட்ட புகார் பறந்ததாம்.. இதனால், அருகிலுள்ள இரண்டெழுத்து மாவட்டத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டாராம்.. இலைக்கட்சி நிர்வாகிகளுடன் ெநருங்கிய நட்பு கொண்டிருக்கும் இவர், அந்த லாபி மூலம், ஒரு சில மாதத்திலேயே மீண்டும் பூட்டு மாவட்டத்தில், அதே இடத்திற்கு ரிட்டன் ஆகி விட்டாராம்..

இதனால், மீண்டும் கப்பம் கட்ட வேண்டுமென்ற அச்சத்தில் சுய உதவிக்குழு பெண்கள் புலம்பி பரிதவித்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை கட்சியில் செல்வாக்குமிக்க நிர்வாகிக்கு எதிராக திரைமறைவில் இறங்கியிருக்கg மாஜி எம்எல்ஏ.,வின் டீம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிமென்ட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இலை கட்சியில் நாளுக்கு நாள் பனிப்போர் அதிகரித்து வருகிறதாம்.. கட்சியில் முக்கிய பொறுப்பில் தாமரையை முன் பெயராக கொண்ட நிர்வாகி பயங்கர செல்வாக்குடன் இருந்து வருகிறாராம்.. இதில் அவரை எதிர்த்து மாவட்டத்தில் இலை கட்சியில் யாரும் அரசியல் செய்ய முடியாதாம்.. இதன் காரணமாக, கட்சியில் உள்ள மற்றொரு தரப்பினரான மாஜி எம்எல்ஏவான இளைய அழகானவர் தலைமையிலான நிர்வாகிகள் செல்வாக்கு உள்ள நிர்வாகிக்கு எதிராக களத்தில் இறங்கியிருக்காங்களாம்..

அதற்கான வேலைகளும் திரைமறைவில் நடந்து வருகிறதாம்.. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தேர்தலுக்கு முன்னதாக மாவட்டத்தில் நாம் யார் என்று செல்வாக்கு உள்ள அந்த முக்கிய நிர்வாகிக்கு காட்ட வேண்டும் என மாஜி எம்எல்ஏ டீமுக்குள் அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சூரிய முகமானவர் எதுவும் செய்யாததால் பிரசித்தி பெற்ற கோயில் தொகுதியில் இலைக்கட்சி இருக்கா என்ற கேள்வி எழுந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில் தொகுதி உள்ளதாம்.. இங்குள்ள இலை தரப்பினர், சூரிய முகமானவர் மீது அதிருப்தியில் இருக்காங்களாம்.. யாரையும் மதிக்காததும், எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வதும்தான் இதற்கு காரணமாம்.. ‘ப விட்டமினை’ அள்ளி வீசினால் வெற்றி பெற்று விடலாம் என மதிப்பீடு செய்துள்ளாராம்..

இதனால் அழையா விருந்தாளியாக சென்று கட்சிப் பணிகளை செய்யும் சில நிர்வாகிகள் தயக்கத்தில் உள்ளார்களாம்.. சூரியமுகமானவர் தொடர்ந்து உயர் அந்தஸ்தில் இருந்தும் தொகுதிக்கு பெரியளவில் எதுவும் செய்யவில்லை என்ற குறை இருக்க, தற்போதைய அரசு, தொகுதிக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தால் அதை தடுப்பதில் குறியாக இருக்கிறாராம்.. இதனாலேயே கவுன்சிலர்களுக்குள் வேறுபாடுகள் ஏற்பட்டு பிளவுபட்டு நிற்கிறார்களாம்.. இதனால் கைகோர்த்து தேர்தல் வேலை செய்ய சாத்தியமில்லாத சூழலே தற்போது வரை நிலவுகிறதாம்.. தொகுதியில் இலை நிர்வாகிகளின் செயல்பாடுகள் மந்தகதியில் இருக்க, ஒன்றியங்களோ கட்சி வேலைகளை செய்யாமல் பணம் ஈட்டுவதிலே குறியாக இருக்காங்களாம்.. இதை தொண்டர்கள் வேதனையுடன் கூறி வருவதால் கோயில் தொகுதியில் இலைக்கட்சி உள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நடிகர் கட்சியின் பிரசார கூட்டத்திற்கு எதிராக முற்போக்கு அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கி இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சியின் ஆலோசனை மற்றும் ஆசியோடு தான் நடிகர் கட்சி செயல்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் தொடக்கத்தில் இருந்தே சொல்லிட்டு வர்றாங்க.. கொள்கை எதிரி என்று டயலாக் பேசும் நடிகர் பிரசார கூட்டங்களில் பேசும்போது மலராத கட்சியை பற்றி விமர்சிப்பதை தவிர்த்து விடுவதை உதாரணமாக சொல்றாங்க.. இந்த சூழலில் மஞ்சள் மாவட்டதுல பிரசார கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள நடிகர் கட்சி முதலில் கூட்டம் நடத்த முடிவு செய்த இடம் மஞ்சள் மாவட்ட தலைநகர்க்கு அருகில் இருக்கிற ஒரு தனியார் பள்ளி மைதானத்தை தான். இதற்கு காரணம், மலராத கட்சியின் தாய் அமைப்பின் பயிற்சி கூட்டம் எல்லாம் இந்த பள்ளியில் தான் நடப்பது வழக்கமாம்.. தாய் அமைப்பு ஆலோசனைப்படி தான் இந்த பள்ளியை நடிகர் கட்சி பிரசார கூட்டம் நடத்த தேர்வு செய்தார்களாம்..

பிரசார கூட்டம் நடக்கின்ற நாளில் பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கு கூட பள்ளி நிர்வாகம் தயாரானார்களாம்.. ஆனா மனுவில் கூறப்பட்ட கூட்டத்திற்கு ஏற்ற மைதானம் இல்லை என போலீஸ் அனுமதி கொடுக்காததால் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டதாம்.. ஆனாலும் இலைக்கட்சியில் இருந்து நடிகர் கட்சிக்கு தாவிய செங்கிஸ்கான் மாநாடு தொடர்பான ஆலோசனை எல்லாம் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு இந்த பள்ளியில் தான் நடத்தி வருகிறாராம்.. ஒரு கல்வி நிறுவனத்தை எப்படி மத அமைப்பு, அரசியல் கட்சி ஆலோசனை நடத்த அனுமதிக்கலாம்னு முற்போக்கு அமைப்புகள் தற்போது போர்க்கொடி தூக்கி இருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா.