பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலகப்புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த 19ம் தேதி மர்ம நபர்கள் புராதன பொருட்கள் சிலவற்றை திருடிச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டில் பிரான்ஸ் அரசு குடும்பத்தின் பாரம்பரிய பொருட்கள் திருடப்பட்டன. அவற்றின் நகை மதிப்பு சுமார் ரூ.900 கோடி.
இந்நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவர் ரோய்ஸி விமான நிலையத்தில் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற போது கைதாகி உள்ளார். எத்தனை பேர் கைதாகினர், திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
