நான்டெரெ: பிரான்சின் நான்டெரெ நகரில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டி ஒன்றில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸ், ஆஸ்திரேலியா வீரர் அலெக்சாண்டர் வுகிக் மோதினர். முதல் செட்டில் இரு வீரர்களும் சரிக்கு சமமாக மோதியதால் டைபிரேக்கர் வரை நீண்டது. அந்த செட்டை, 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் டெய்லர் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் ஆக்ரோஷமாக மோதிய டெய்லர், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். இதையடுத்து, 3வது சுற்றுக்கு அவர் முன்னேறினார்.
+
Advertisement
