Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீடாமங்கலம் அருகே வெண்ணாற்று கரையில் பனை நடும் பணி

*பொதுமக்கள் விதை நட்டனர்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே வெண்ணாற்று கரையில் பனை நடும் பணி நடைபெற்றது. கிராமமக்கள், மாணவர்கள் விதை நட்டனர்.நீடாமங்கலம் அருகே நகர் ஊராட்சியில் நரசிங்கமங்கலம்,ப ன்னிமங்கலம் பகுதி வெண்ணாற்றங்கரை கரையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரண்டு பகுதிகளிலும் பனை விதைகளை கிராமமக்கள், மாணவர்கள் மற்றும் பல்நோக்கு சேவை இயக்கத்தினர் இணைந்து நட்டனர்.

நரசிங்கமங்கலம் பகுதியை சேர்ந்த நாட்டாமை ராமசாமி, பூபாலன், சிதம்பரம், சோமசுந்தரம், சீனிவாசன், ஆசை ஆசைத்தம்பி பல்நோக்கு சேவை இயக்க துணை தலைவர் ராஜேந்திரன் துணை செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், பனை மரங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கின்றது, மேலும் நுங்கு, பதனீர், பனங்கிழங்கு உள்ளிட்ட உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை தரும் பனை மரத்தை காப்பது நமது கடமை என்றும் தமிழ்நாடு அரசு வருடம் தோறும் லட்சக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தும், பனை மரங்களை இனி வெட்ட முடியாத அளவில் சட்டம் இயற்றியும் அவற்றை காத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

நிகழ்வில் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்க உறுப்பினர்கள், கிராமவாசிகள் இணைந்து நரசிங்கமங்கலம் பைபாஸ் சாலை பாலம் வரை இரண்டு கிலோ மீட்டர் அளவிற்கு சாலையின் இரண்டு பகுதிகளிலும் பனை விதைகளை நட்டனர். நிகழ்வின் முன்னதாக ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். செயலாளார் ஜெகதீஷ் பாபு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.