ஜெருசலேம்: போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து,பணய கைதிகளாக பிடித்து சென்ற இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்து வருகிறது.நேற்று முன்தினம்,2 பணய கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இஸ்ரேல் நேற்று 30 பாலஸ்தீன கைதிகளின் உடல்களை ஒப்படைத்துள்ளது.
இதுவரை 195 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ள இஸ்ரேல் அவர்களை பற்றிய விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் சிறையில் இருந்த போது அவர்கள் இறந்தார்களா அல்லது போரின் போது கொல்லப்பட்டார்களா என்பது தெரியவில்லை.
